நமது முன்னோர்கள் அன்று மன்னர் காலத்தில் வாள் ஏந்தி போராடினார்கள்; இன்று வேல் ஏந்தி போராடி வருகிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் கட்சியினர் மத்தியில் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவிற்கு 10% மேல் வாக்கு வங்கி உள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதால் ஆட்சியை மாற்றும் சக்தி பெண்களுக்கு தான் உள்ளது.
நமது முன்னோர்கள் அன்று மன்னர் காலத்தில் வாள் ஏந்தி போராடினார்கள்; இன்று வேல் ஏந்தி போராடி வருகிறார்கள்.தேமுதிக பலத்தை நிரூபிப்போம்; வெற்றிக்கனியை விஜயகாந்திடம் சமர்ப்பிப்போம் என்றார்.
இந்தநிலையில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக தயாராகி வரும் நிலையில், தேமுதிகவும் களத்தில் இறங்கியுள்ளது.
பிப்ரவரி 25 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் தேமுதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக–தேமுதிக கூட்டணி வகித்த நிலையில் இந்த தேர்தலில் இன்னும் தொகுதி பங்கீடு குறித்து பேச அழைக்காததால் தேமுதிக–அதிமுக கூட்டணி முடிவாகாமல் உள்ளது.



