சசிகலாவுக்கு பெங்களூருவில் இருந்தே அமமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கத்திக்குப்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, 'புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு செயல்படடுவதே என் விருப்பம். நம்முடைய பொது எதிரியை ஆட்சிக் கட்டிலில் அமரவிடாமல் செய்ய ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.
அதிமுகவை கைப்பற்றுவேனா இல்லையா என்பதனை கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன்.. அப்போது விரிவாக பேசலாம். கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்திருக்கிறது. ஒற்றுமையுடன் செயல்படுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை ஒற்றுமை என அழுத்தி சொல்லும் சசிகலாவின் எண்ணம் அதிமுக- அமமுகவை இணைக்க வேண்டும் என்பதுதான் என்பது அவரின் பேச்சின் மூலம் தெளிவாக தெரிகிறது.


