அதிமுகவின் உறுப்பினர் அல்லாத சசிகலா, காரில் அதிமுக கொடி கட்டுவது தவறானது என்று எச்சரிக்கப்பட்டது. காரில் அதிமுக கொடி கட்டக்கூடாது என்று அதிமுக அமைச்சர்கள் பலரும் தமிழக டிஜிபியிடம் புகாரளித்தனர்.
இதையடுத்து, சசிகலா காரில் அதிமுக கொடி கட்டக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் கிருஷ்ணகிரி காவல்துறை எச்சரித்திருந்து.
ஆனாலும், தடையை மீறி சசிகலா காரில் அதிமுக கொடி கட்டியபடியே காரில் பயணம் செய்தார். தமிழக எல்லையை நெருங்கும் போது சசிகலா வந்த கார் தீடீரென்று நின்றது. அவரின் காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.
எச்சரிக்கைக்கு பயந்து அதிமுக கொடியை அகற்றிவிட்டு காரில் பயணிக்கிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில், எவரும் நினைத்து பார்த்திராத வகையில் சட்டென்று வேறு ஒரு காரில் ஏறிக்கொண்டார் சசிகலா. அந்த காரில் அதிமுக கொடி இருந்தது.
காரை மாற்றினால் போதுமா? கொடியை மாற்றவேண்டாமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கொடியை மாற்ற வேண்டிய அவசியமில்லை. சமயோசிதமாக செயல்பட்டுதான் சசிகலா, இந்த அதிரடி முடிவினை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
காரை மாற்றியும் கொடியை மாற்றாதது ஏன்? போலீசாரை கன்பியூஸ் செய்தார் சசிகலா.
அந்த கார் சூளகிரி அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பங்கியின் கார். அதிமுக உறுப்பினர் அல்லாத சசிகலாதான் அதிமுக கொடியை வைக்க தடை. ஆனால், அதிமுக நிர்வாகியின் கார் என்பதால் அவரின் காரில் கொடி இருக்க தடையில்லையே. இதனால், சிறிது நேரம், கொடியை அகற்றுவதா? வேண்டாமா? என போலீசார் தடுமாறினர்.
பின்னர் விவரம் தெரியவந்ததும், அதிமுக கொடியை அகற்றவில்லை. முன்னதாக காரில் அதிமுக கொடியுடன் வந்ததற்காக மட்டும், சசிகலாவின் காரை தடுத்து நிறுத்தப்பட்டு, நோட்டீஸ் கொடுத்தனர் போலீசார்.



