சசிகலாவுக்கு நேற்று அதிமுக கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட, 7 பேரரை அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அதிமுக தலைமையான ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும் இன்று முதல் டி. தட்சணாமூர்த்தி, எஸ்.ஆர்.சம்பங்கி, பி.சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திரரெட்டி, ஆர்.பிரசாந்த் குமார், ஏ.வி.நாகராஜ், வி.ஆனந்த் ஆகிய 7 பேரையும் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசிகலா சூளகிரி அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பங்கியின் காரில்தான் பெங்களூரிலிருந்து தமிழகம் வந்தார். அதிமுக உறுப்பினர் அல்லாத சசிகலாதான் அதிமுக கொடியை வைக்க தடை.
இந்தநிலையில், அதிமுக நிர்வாகியின் கார் என்பதால் அவரின் காரில் கொடி இருக்க தடையில்லையே. இதையடுத்து, சிறிது நேரம் கொடியை அகற்றுவதா? வேண்டாமா? என போலீசார் தடுமாறினர்.


