Type Here to Get Search Results !

வரிகளை குறைத்தால் போதும் இலவசம் தேவையில்லை: ஊழலுக்கு வித்திட்டவர்களே மக்கள்தான்..!

தமிழக அரசியலில் தங்கள் பதவியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அனைத்தையும் ஆட்சியாளர்கள் செய்திகிறார்கள். 


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் இந்த சூழலில், இலவச அறிவிப்புகள், அரசு குறிப்பிட்ட வழக்குகளும் ரத்து செய்வதுதென்று ஒருபுறம் அதிமுக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், மத்திய அரசோடு இணைப்பில் இருக்கும் அதிமுக, கேஸ் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் உயர்வு என்று மக்களின் மீது சுமத்திகிற சுமையை குறைக்க வழிதேடாமல், அவர்களை கண்டிக்காமல் கண்கொண்டு ரசிப்பதுதான் மக்களுக்கான அரசா ? 


இலவசங்களை யாரும் எந்த அரசும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, மக்களின் மீது சுமத்துகிற வரியை குறைத்தால் போதும். மக்களே அவர்களுக்கான தேவையான பொருட்களை வாங்குவார்கள். கவர்ச்சியை காட்டி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்ததும் சுமைகள் அனைத்தும் வரியின் பெயரால் மக்கள் மீதே விழுகிறது. 


அரசு அனைத்து துறைகளிலும் நிறைவு பெற்றுவிட்டதா? அரசு லாபநோக்கத்தில் நடக்கிறதா? எந்த ஆட்சி வந்தாலும் பற்றாக்குறையாகவே இருக்கிறது அரசின் கஜானா! திமுக வந்தாலும் அதிமுக வந்தாலும் கஜானா நிறைந்திருப்பது எப்போது? நாடே கடனில் பயணிக்கும்போது இலவசம் எதற்கு? அடித்த கொள்ளையில் மக்களுக்கும் பங்கா?  


இந்தக்கால இளைஞர்கள் சிந்தித்து செயல்படவேண்டும். அரசியல்வாதிகள் பிறக்கும் குழந்தை முதல் முதியவர்வரை கவர்ச்சி திட்டங்களை காட்டி தங்கள் பதவிகள் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு அனைத்து செய்திகளையும் நொடிப்பொழுதில் கொண்டுபோய் சேர்க்கும் பத்திரிகையாளர்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. 


முதல்வர் சேலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உங்களுக்கும் இடத்திற்கு ஏற்பாடு பண்ணிருக்கோம் கேள்விகளை பார்த்துகேளுங்க என்று கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம்?


திமுக வந்தாலும் அதிமுக வந்தாலும் மக்களின் சுமைகள் என்றும் குறையப்போவதில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொடியின் கலரும் ஆட்களின் உருவமும் மாறுமேத் தவிர ஆட்சியும் ஊழலும் அப்படியேதான் இருக்கும். இதுதான் விதி. 


திமுக சரியாக ஆட்சி நடத்தியிருந்தால் ஏன் ஆட்சிமாற்றம் வரப்போகிறது. அதிமுகவின் செல்லப்படும் திமுகவின் செல்லப்படும் ஒன்றேதான். அதில் எந்த மாற்றமும் இருக்காது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 


ஆட்சி அதிகாரம் இவர்களுக்கு வரும்வரை என்னவேண்டுமானாலும் கூறுவார்கள். முதல்வர் சாலையோர டீ கடையில் டீ குடித்தார். இதுதென்ன ஆச்சரியம் இருக்கு. மக்கள் தினமும் அதே சாலையோர டீ கடையில்தானே டீ குடிக்கிறார்கள். முதல்வர் என்றால் என்ன? முதல்வர் என்றால் முதலாளி என்று அர்த்தமா? மக்களுக்கான முதன்மையான வேலைக்காரர் தான் முதல்வர்.


முதல்வர் சாலையோர டீ கடையில் டீ குடித்தார் என்ற விளம்பரத்தை முதலில் நிறுத்துங்கள் அசிங்கமாக இருக்கிறது. துணை முதல்வர் டீ கடையே வைத்திருந்தவர்தான். ஏன் இன்னும் சொல்லப்போனால் பிரதமர்கூட டீ கடையில் இருந்தவர்தான். இதில் என்ன ஆச்சரியம் இருக்கு.


முதல்வர் என்றால் அமைச்சர்கள் என்றால் வேற்றுகிரகவாசிகளா? அவர்களும் நம்மோடு இருந்தவர்கள்தானே! இருப்பவர்கள்தானே.!


திமுகவும் அதிமுகவும் தேர்தல் காலத்தில் நடத்துகிற நாகடகம் இருக்கே முடியல? சுமார் 4 ஆண்டுகளாக வராதா ஸ்டாலின் மக்களைத் தேடி வருகிறார். போன தேர்தலுக்கு வந்த அமைச்சர்கள் தற்போது மக்களைத் தேடி விதி விதியாக சொல்கிறார்கள். அதிமுகவும் ஊழல் செய்யவேயில்லை என்பதும் திமுகவும் இல்லை நீங்கள் ஊழல்வாதிகள் என்று சொல்வதும் யாரை பைத்தியம்பன்ற வேலை. இந்த ஆட்சியில் ஊழல் அதிமுக செய்திருந்தால் அதில் திமுகவுக்கு நிச்சயம் பங்கு போயிருக்கும். 60/40% யாரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. 


அரசியல் தற்போது வணிக பொருளாகி விட்டது. அவர்களுக்கு அது தொழில். இலவசத்தை வாங்கி மக்களும் ஊழலுக்கு துணைபோகிறார்கள் என்பதும் நிதர்சமான உண்மை. இதை யாரும் மறுக்கமுடியாது. ஆடு, மாட்டை கோழிகளை இலவசமாக கொடுத்த அரசு, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அதை செய்யவில்லை. 


விவசாயத்திற்கு முக்கியத் தேவையான நீரை தேக்க குளம் குட்டைகளை அதிகப்படுத்தி புதிய தடுப்பணைகள் உருவாக்கியிருக்கலாம். விவசாய பொட்களை அரசே நேரடியாக விலை நிர்ணயம் செய்து விற்க முன்வந்திருக்கலாம். விலைவாசி உயர்வை கட்டுக்குள் இருந்திருக்கும்.     


1947லில் விடுதலை பெற மக்கள் எதை கையில் எடுத்தார்களோ அன்று போராடிய போராட்டங்களும் மக்கள் புரட்சியும் மீண்டும் உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மக்கள் சுமக்கும் அளவிற்கு மேல் சுமைகளை சுமக்க வைத்துவிட்டார்கள். இனி மக்கள் புரட்சியே இதற்கான வழியாக அமையும். 


மக்களை சிந்திக்க வைக்கக்கூடாது. அவர்களை ஏழையாகவே வைக்கவேண்டும். அவன் வறுமையில் இருக்கும்வரை அரசியல், ஊழல் என்று எதைப்பற்றியும் கவலைப்படமாட்டன் என்பதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் திட்டம். இது இவர்களுக்கு தொழில். இதில் மக்கள் நலனுக்கெல்லாம் வேலையேயில்லை. புரிந்துகொள்ளுங்கள் மக்களே..! சிந்தித்துப்பாருங்கள் நான் சொன்ன உண்மைகள் புரியும்..!   மீண்டும் சிந்திப்போம் -வேங்கை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies