மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பூரண மதுவிலக்கு தொடர்பாக நடந்த வழக்கில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் விதமாக பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், இந்த வழக்கின் தீர்ப்பில், மதுவிற்பனை மூலம் வருமானம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாநிலமே மதுவில் மூழ்கிக்கிடக்கிறது என்று வேதனை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, ஆனால் , மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது என்றும் வேதனையுடன் கூறினர்.
ஒவ்வொரு ஆண்டும் மதுபான விற்பனையின் மூலமாக 30 ஆயிரம் கோடி ரூபாயினை வருமானமாக ஈட்டும் அரசு, 90 ஆயிரம் கோடி ரூபாயினை பொது சுகாதாரத்திற்காக செலவிடுகிறது.
அப்படி இருக்கையில், நீதிமன்றம் சொல்லும் இந்த யோசனைகளை அரசு கவனிக்குமா? என்றும் கவலையுடன் கேள்வி எழுப்பி உள்ளனர் நீதிபதிகள்.



