கலப்பு திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் பெற்றோருக்கு எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழக பிற்படுத்தப்பட்டோர்/மிக பிற்படுத்தப்பட்டோர்/சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் வெளியிட்டிருக்கும் அரசாணையில், ‘எஸ்.டி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு அவ்வப்போது சலுகைகளை விரிவாக்கம் செய்து வருகிறது.
கலப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளை பெற்றோர் முடிவு செய்வதற்கு ஏற்ப, தந்தையின் சாதி அல்லது தாயின் சாதியை சேர்ந்ததாக அறிவிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது’என்று தெரிவிக்கப்படுள்ளது.
கலப்பு திருமணத்தில் இணைந்த வெவ்வேறு சாதியை சேர்ந்த தந்தைக்கும் தாய்க்கும் பிறந்த குழந்தையின் சாதியினை பெற்றோர் அறிவிப்புக்கு ஏற்ப பரிசீலிக்கலாம் என்றுஅரசு முடிவு செய்திருக்கிறது’ என்றும், பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் குழந்தைக்கான சாதிச்சான்றிதழை வருவாய் அதிகாரிகள் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


