வரும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக-அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதேநேரம், அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் தேமுதிகவும், பாமகவும் இழுபறியில் உள்ளது.
இந்தநிலையில், தேமுதிக 40 சீட்டுகளுக்கு அதிக இடங்கள் கேட்டு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், பாமக 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தையை முடக்கியுள்ளது. இந்தநிலையில், சூழலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அதன் தொண்டர்கள் விரும்புவதாக பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில், பா.ம.க : 25, பா.ஜ.க : 20, தே.மு.தி.க : 10, த.மா.க : 7, டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி : 2, அ.தி.முக 170 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க உடனான ஒப்பந்தம் வருகிற 21-ஆம் தேதி டெல்லியிலும், மற்ற கட்சிகளுடன் 24-ஆம் தேதி சென்னையிலும் கையெழுத்தாகும் என்று அ.தி மு.க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


