முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.
இதுகுறித்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, தமிழக ஆளுநருக்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்தநிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பே பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான். அதிமுக அரசு என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறது.




