சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நினைத்துப்பார்க்க முடியாத அளவு அதிகரிக்கவுள்ளது.
தற்போது,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும்.
அந்த வகையில் சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 769 ரூபாய் வரை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.50 உயரலாம் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ரூ.735க்கு விற்பனையாகி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் இனி 50 ரூபாய் உயர்ந்து ரூ. 785ஆக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


