Type Here to Get Search Results !

நான் நேர்மையான முறையில் முதல்வராவேன்: கூவுத்தூர் சாக்கடையில் உருண்டுபோய் பதவியை பெற்றவர் எடப்பாடி பழனிசாமி -மு.க.ஸ்டாலின்

நாகை மாவட்டம் பி.ஆர்.புரத்தில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 'மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். 


விரக்தியில் முதலமைச்சர் பழனிசாமி பேசி வருகிறார், எந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. ஏன் தனக்கு பதவி வழங்கிய சசிகலாவுக்கு கொடுத்த வாக்குறுதியை கூட அவர் நிறைவேற்றவில்லை. கோடிக்கணக்கான மக்கள் முதலமைச்சர் பழனிசாமியை தோற்கடிக்க தயாராகிவிட்டனர். நான் நடத்தும் கூட்டங்களுக்கு பல்லாயிரக்கண மக்கள் வருகின்றனர். என்னை நம்பி மனுக்களை கொடுக்கின்றனர்.


மனுவுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நினைக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி விரக்தியில் இருக்கிறார். திமுகவை வெற்றிபெற வைக்க கோடிக்கணக்கான மக்கள் தயாராகிவிட்டனர். 


கூவுத்தூர் சாக்கடையில் உருண்டுபோய் பதவியை பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அவரை போல குறுக்கு வழியில் சென்று முதல்வர் பதவியை அடைய விரும்புவன் நான் இல்லை. ஊழல் படிந்த இரு கரங்களை பிரதமர் மோடி இன்று உயர்த்தி பிடித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.


நியாயமான முறையில் வெற்றிபெற்று நேர்மையான முறையில் முதல்வர் பதவியை பெறுவேன்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். அடுத்த ஊழல் பட்டியல் தயாராகி வருகிறது எனக் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies