Type Here to Get Search Results !

சசிகலா திரைப்பட தயாரிப்பு நிறுவனம்: எவிஎம் ஸ்டுடியோவுக்குள் இயக்குனர் கே.பாக்யராஜ் துவக்கிவைத்தார்

கொரோனா காலங்களில் பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளில் பெருமளவு பாதிக்கப்பட்டது சினிமா துறை ஆகும், திரைத்துறை தற்போதுதான் தன் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம்.


இந்நிறுவனத்தில் புதிய தயாரிப்பாளர்கள், இளம் இயக்குனர்கள், வெப் சீரிஸ், குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில்  உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது. 


இளம் மாணவ இயக்குனர்கள் மற்றும் அறிமுகமாகும் இயக்குனர்களுக்கு புரோடக்ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனிற்கு தேவையான உதவிகளையும் சில சிறப்பு சலுகைகளையும் செய்ய தயாராக உள்ளது என்பதை இதன் நிர்வாகத இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


மேலும், சினிமா துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் “Freedom of Film making ” எனும் தாராக மந்திரத்துடன் விரைவில் இதன் பணிகள் துவங்கவுள்ளன. 


நிறுவனத்தை பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள், நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், பேசிய இயக்குனர் பாக்யராஜ், 'இது வாய்ப்புக்காக காத்திருக்கும் கலைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது அதன் கட்டமைப்பிலே புரிகிறது. இந்நிறுவனத்திலிருந்து தரமான கலைஞர்கள் உருவாகி வருவார்கள் என நம்புகிறேன்' எனக் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies