Type Here to Get Search Results !

கோவையில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

கோவையை அடுத்த மசகாளிபாளையம் அருகே தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அடுத்த மசகாளிபாளையம் அருகேயுள்ள  சுப்பண்ணா பகுதியை சேர்ந்த பிரசாத்- விஜயலட்சுமி தம்பதிக்கு கிஷான் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. இவர்களுக்கு குழந்தை பிறந்து 3 மாதம் ஆனதால், நேற்று அப்பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். 


ஒரு சில குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் ஏற்படும் என்பதால், மருத்துவர்கள் காய்ச்சல் வந்தால் போடச் சொல்லி மருந்தும் விஜயலட்சுமியிடம் கொடுத்துள்ளனர்.


இவர்கள் குழந்தையுடன் வீடு திரும்பியதும் குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. இந்தநிலையில், தடுப்பூசி போட்டதால் குழந்தை அழுவதாக எண்ணிய விஜயலட்சுமி, மருத்துவர்கள் கொடுத்த மருந்தை குழந்தைக்கு கொடுத்திருக்கிறார். 

அதை கொடுத்த பிறகும் குழந்தை, பால் கூட குடிக்கவில்லையாம். சிறிது நேரம் கழித்து குழந்தை திடீரென மயங்கி விழுந்துள்ளது. இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


இந்த பிஞ்சு குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 


இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததா? அல்லது குழந்தைக்கு வேறுஏதேனும் பிரச்னையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies