கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுமார் 5000 பயனாளிகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாலிக்கு தங்கம், விவசாயிகளுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கொடுத்தார்.
அந்தநிகழ்ச்சிக்கு, பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கடந்த 2019ஆம் ஆண்டு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
தேர்தல் முடிந்த பிறகு பதவியேற்ற திமுக பிரமுகர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், கடந்த தேர்தலின் போது மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் அதிமுக நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக மக்களிடம் சொல்லியதையும் செய்யும் சொல்லாததையும் செய்யும் என்றும் வரும் தேர்தலில் முதல்வர் பழனிசாமி தான் வெற்றி பெறப் போகிறார் என்றும் தெரிவித்தார்.


