திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை சேர்ந்தவர் பழனியம்மாள்(51). இவர் தரகம்பட்டியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
அப்போது, அரசின் மகப்பேறு நிதிஉதவி பெற்றுத் தரவேண்டுமானால் எனக்கு ரூ.2 ஆயிரம் கொடு என்று செவிலியர் பழனியம்மாள் லஞ்சம் கேட்டிருக்கிறார். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் பெற்று தாருங்கள் என்று கூறியிருக்கிறார். அப்படியெல்லாம் முடியாது என்று அதிகாரத்தோரணையில் பேசியிருக்கிறார் செவிலியர் பழனியம்மாள்.
இதனால் கோபமடைந்த இளமதி, லஞ்சம் கொடுப்பதாக செவிலியர் பழனியம்மாளிடம் சொல்லிவிட்டு, உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அந்த தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறைய அதிகாரிகள், இளமதியிடம் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டை, இளமதியிடம் இருந்து செவிலியர் பழனியம்மாள் வாங்கும் போது, அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். செவிலியர் பழனியம்மாள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.


