Type Here to Get Search Results !

விவசாயிகள் பம்புசெட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை மற்றும் பல்லடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், 'விவசாயிகளுக்கான அரசாக அதிமுக அரசு திகழ்கிறது. கனிமொழி போகும் இடமெல்லாம் பொய் பிரசாரம் செய்து வருகிறார். 


நான் புள்ளி விவரத்துடன் பேசுகிறேன். மக்களை பற்றி கவலைப்படாத கட்சி திமுக; மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது திமுக என்ன செய்தது? 1100 என்ற எண்ணில் குறைகூறி தீர்வு காணும் திட்டம் ஸ்டாலின் சொல்லி நான் அறிவிக்கவில்லை என்றார்.


மேலும் அவர் பேசுகையில், விவசாயிகள் பம்பு செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் விதமாக 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies