தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி வரவிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக தலைவரான மோடியின் வருகை அரசியல் ரீதியானதாகவே பார்க்கப்படுகிறது.
நேரு விளையாட்டு அரங்கில் மெட்ரோ ரெயில் விரிவாக்கம் மற்றும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து, சென்னை கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகள் நடத்த 20 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி பிற்பகல்1.30 மணியளவில் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். மோடி வருகையை ஒட்டி 4 அடுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
சென்னையில் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 3 மணி நேரம் மட்டுமே கலந்து கொள்ள இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையம், அடையாறு ஐஎன்எஸ், நேரு உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


