காங்கேயத்தில் காங்கேயம் காளைக்கு பிரமாண்டமாக வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையில் முதல்வர் டப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார்.அதையடுத்து, திருப்பூர் மாவட்டம் முழுக்க தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் காங்கேயத்தில் நேற்று மக்கள் மத்தியில் பேசிய அவர், தென்னை விவசாயிகள் அதிகம் இப்பகுதியில் உள்ளார்கள். அதனால், அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் தமிழக அரசு நீரா பானம் தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. அதேபோல, கொப்பரை தேங்காயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனைமலை ஆறு, நல்லாறு, பாண்டியாறு, புன்னம்புழா திட்டங்கள் முன்னேற்றத்தில் இருக்கிறது. அதேபோல, அவர் காங்கேயத்தில் காளைக்கு பிரமாண்ட வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



