Type Here to Get Search Results !

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: சிறை நிர்வாகம் | சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்படும் வீடியோ #Sasikala

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் #Bangalore_ Prison_ Administration #Video_ of_ Sasikala_ going_ in_ a_ wheelchair




சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருகிற 27ஆம் தேதியன்று விடுதலையாவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதி என்றும், அதற்கான அலுவல்பூர்வ கடிதம் கிடைத்துவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


சசிகலா விடுதலையாக ஏழு நாள்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடாகியுள்ளது. அவரை உற்சாகமாக வரவேற்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு சிறைக்கு விரைந்தனர். சசிகலாவுக்கு சளி, இருமல், மூச்சு தினறல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன் தொடர்ச்ச்சியாக, பெங்களூரு சிறையில் இருந்து பவுரிங் மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அப்போது, ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து சக்கர நாற்காலியில் சசிகலா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சசிகலாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அத்துடன், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், 'கடந்த ஒருவாரமாக சசிகலாவுக்கு  காய்ச்சல் இருந்ததாக சிறை நிர்வாகம் தரப்பில் கூறினார்கள். ஆக்சிஜன் அளவு குறைந்ததாகவும் தகவல் தெரிவித்தார்கள்' என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies