தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த இட்லப்பட்டியில், தீபம் தொண்டு நிறுவனம் சார்பில் நபார்டு வங்கியுடன் இணைந்து அகர்பத்தி தயாரிக்கும் பயிற்சி துவக்க விழா
அரூர், ஜன. 21.,
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த இட்லப்பட்டியில், தீபம் தொண்டு நிறுவனம் சார்பில் நபார்டு வங்கியுடன் இணைந்து அகர்பத்தி தயாரிக்கும் பயிற்சி துவக்க விழா, 21-ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. தீபம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கற்பகவல்லி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், நபார்டு வங்கி மாவட்ட மண்டல மேலாளர் பிரவீன் பாபு பயிற்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மேலும், நபார்டு பயிற்சி திட்டம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
இதைத்தொடர்ந்து, இந்தியன் வங்கி மேலாளர் தென்னரசு வங்கி பணிகள் குறித்து பேசினார். பயிற்றுனர் மூர்த்தி அகர்பத்தி தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
குணவதி விற்பனை திறன்கள் குறித்து பேசினார். கிரேட் என்ஜிஓ உமாமகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். தொனி கூட்டமைப்பு தலைவர் சரவணன் உரையாற்றினார்.
மேலும் நிகழ்ச்சியில், அண்ணாதுரை, வெற்றிவேல் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.