ஜனவரி 27ஆம் தேதியோடு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம் சசிகலாவை விடுதலை செய்தது. விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதால் அவர் சென்னை திரும்ப முடியாத நிலை இருக்கிறது.
தற்போது, சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து, சசிகலா விரைவில் பூர்ண குணமடைந்து தமிழ்நாடு திரும்பயிருக்கிறார்.
சசிகலாவை விடுதலை செய்யும்வரை சிறை நிர்வாகம் அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தது. இதையடுத்து, சசிகலாவுக்கு கூடுதல் பாதுகாப்புவேண்டுமென்று பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை வைத்ததால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், கொடுக்கப்படுகின்ற பாதுகாப்பும் போதாது என்று, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு பணியில் இருந்த, கார்டன்சிவா தலைமையில்10 மெய்க்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டியிருக்கிறார்கள்.


