முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 2ஆம் தேதி கூடயிருக்கிறது. இதில், கடந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பரபரப்பான சூழலுக்கிடையே, இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, தற்போது முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கியிருக்கிறது. அதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றிருப்பதாக தெரிகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


