குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்.
பள்ளிகள், சாலைகளில், வீடுகளில் என்று எந்த இடத்திலும் சிறுமிகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போனது. மனதில் பயம் இல்லாததே பாலியல் வன்கொடுமைக்கு காரணமாக அமைகிறது. மிக கடுமையான தண்டனை வழங்கப்படாததே, இது போன்ற சம்பவங்கள் தொடருவதற்கு காரணமாக அமைகிறது.
இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 8ஆம் படிக்கும் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சோழவரம் அடுத்துள்ள காரனோடை பகுதியில், மளிகை கடை ஒன்றை நடத்தி வருபவர் ஹரிகிருஷ்ணன். இவரது மளிகை கடைக்கு மளிகை பொருள் வாங்க வந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, மாணவி தனது பெற்றோர்களிடம் இந்த தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்ததும் ஆத்திரமடைந்த பெற்றோர், அந்த நபரை சரியான கவனிப்பாக அடித்து உதைத்ததோடு, பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், ஹரிகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


