கொடைக்கானல் மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்த மேரி, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. இது சம்பந்தமாக, கள்ளக்குறிச்சி போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
கொடைக்கானல் மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்த மேரி, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இது சம்பந்தமாக, கள்ளக்குறிச்சி போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி. இவருக்கு 24 வயசு ஆகிறது. இவருடைய அப்பா பெயர் அந்தோணிசாமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொடைக்கானல் ஒரு மசாஜ் சென்டருக்கு வேலைக்கு வந்துள்ளார்.
அந்த மசாஜ் சென்டரில்தான் 'சுபிஷ்' என்ற இளைஞரை சந்தித்துள்ளார். சுபிஷ் என்பவருக்கு 28 வயது. இவர்கள் இருவருக்கும் பழக்கம் காதல் மலர்ந்தது. இதனால், 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமலே, ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மசாஜ் சென்டர்களில் அரசு அதிரடி சோதனை நடத்தியது. அதில், மேரி வேலை பார்த்த மசாஜ் சென்டரும் அடக்கம்.
இறுதியில், அந்த மசாஜ் சென்டரை மூடிவிட்டனர். இதனால் கையில் காசின்றி 2 பேருமே தவித்துள்ளனர். இந்த வேலை நிலையில் வருமானம் இல்லாததால் வறுமையில் குடும்பமும் நடத்த முடியவில்லை. இந்தநிலையில்தான் மேரி தன்னுடைய அறைக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தகவலறிந்து கொடைக்கானல் போலீசார் விரைந்து வந்தனர்.
மேரியின் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையும் ஆரம்பமானது. அப்போதுதான், அந்த ரூமில் 2 பேரும் மது அருந்தியதற்கான அடையாளம் இருந்தது. இது குறித்து சுபிஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் சொல்லும்போது, "எங்களுக்கு வேலை இல்லை. வருமானமும் இல்லை. அதனாலேயே திருமணம் கூட செய்து கொள்ள முடியவில்லை.
தினம் தினம் பண பிரச்சனை இருந்தத , இதனால், எங்களுக்குள் அதிகமாக சண்டைகள் வந்து போகும். வேலை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவில் செய்திருந்தோம். மேரியிடம் சொந்த ஊருக்கு போறதுக்கு கூட மேரி கிட்ட பணம் இல்லை.. அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என்று வாக்குமூலத்தில் கூறினார்.
மேரியிடம் ஊருக்கு போறதுக்கு கூட பணம் இல்லையென்றால், ஒன்றாக சேர்ந்து மது குடிக்க மட்டும் எப்படி என்ற சந்தேகமும் எழுகிறது? அத்துடன் மேரி தற்கொலையில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.