இன்று சென்னை சென்ரலில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கொரோனா வைரசுக்கு எதிராக, இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. கடந்த, 16-ஆம் தேதி, முதல் கோவாக்சின் தடுப்பூசி போடும் முதல்கட்ட நடவடிக்கை துவங்கப்பட்டது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் என, முன்கள பணியாளர்களுக்கு, முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 42,947 பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை சென்ரலில் உள்ள ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். முன்னதாக, அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தடுப்பூசி போட்டுக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 908-வது நபராக நானும் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தமிழகத்தில் இதுவரை 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைவாகவே கோவாக்சின் போடப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தவே அதனை நானும் போட்டு கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.