பெண்களை இழிவாக பேசிவரும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், பெண்களுக்கு பாலியில் தொந்தரவு கொடுத்த சூலூர் திமுக ஒன்றியசெயலாளரை கண்டித்தும், திமுக மக்கள் சபை என்ற பெயரால் பங்கேற்ற பெண்ணைத் தாக்கியதற்கு காரணமாக இருந்த மு.க.ஸ்டாலினை கண்டித்தும் பொள்ளாச்சியில் அதிமுக மகளிரணி சார்பில் நேற்று இரவு ( திங்கள்கிழமை ) பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்கும் என் மகனுக்கு இதில், தொடர்பு இருப்பதாக சிறு ஆதாரத்தை கொடுத்தால், என்னுடைய, ஐம்பது ஆண்டு கால அரசியல் பொதுவாழ்க்கையை விட்டு விலகிக்கொள்கிறேன். இதை நிரூபிக்காவிட்டால், திமுக தலைவர் பதவியிலிருந்து மு.க.ஸ்டாலின் விலகத்தயாரா? என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சவால் விடுத்துள்ளார்.
பொள்ளாச்சியில், திமுகவினரை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:
எனது மகனை, பாலியல் வழக்கில் தொடர்புபடுத்தி, திமுகவினர் பேசி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை, காவல்துறையிடம் புகார் கொடுக்க கூறியதே நான் தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதால், நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தேன்.
பாலியல் வழக்கு சம்பந்தமாக என் மகனுக்கு தொடர்பு இருப்பதாக சிறு ஆதாரத்தை கொடுத்தால், என்னுடைய, 50 ஆண்டு கால அரசியல் பொதுவாழ்க்கையை விட்டு விலகிக்கொள்கிறேன். அவ்வாறு, நிரூபிக்காவிட்டால், திமுக தலைவர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் விலகத்தயாரா? பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஓட்டு சேகரிக்கும் திமுகவின் தந்திரம் இங்கே பலிக்காது என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.