Type Here to Get Search Results !

போக்குவரத்து துறையில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பலன்களை வழங்காமல் வைப்பது சரியானதல்ல -டி.டி.வி.தினகரன்

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-



போக்குவரத்து துறையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம்வரையான பணியில் இருந்து  ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை வழங்குவதற்குரிய உத்தரவினை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். கடந்த மே 2020-ஆம் ஆண்டுக்குப்  பிறகு ஓய்வுபெற இருந்தவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 2019-ஆம்  வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் பலன்களை வழங்கி விட்டு இடைப்பட்ட 4 மாதங்களில் ஓய்வு பெற்றவர்களை காத்திருக்க வைப்பது சரியானதல்ல. எனவே இதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு டிடிவி.தினகரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies