திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார்.
சென்னை சி.ஐ.டி.. காலனியில் உள்ள வீட்டில் தந்தை கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு தாயார் ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார்.
![]() |
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தனது பிறந்த நாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். |
அத்துடன் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம், மு.கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். அங்கு மு.க.ஸ்டாலினிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். துர்கா ஸ்டாலினும் கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பிறகு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கார்டு அனுப்பி இருந்தார். புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
நடிகை குஷ்பு டுவிட்டரில் கனிமொழி எம்.பிக்கு பிறந்தநாள்
வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அன்பு மகிழ்ச்சி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும் என்று டுவிட்டரில் வாழ்த்து கூறி பதிவிட்டுயிருந்தார்.
@khushsundar Thank you for your Wishes. https://t.co/tiGIhUUeT2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 5, 2021