Type Here to Get Search Results !

திமுகவின் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" பிரச்சாரத்தில் எழிலரசியை வைத்து கொட்டிய பொய்கள்: ஆதாரங்களுடன் உண்மைகள் அம்பலம்

திருவண்ணாமலை சேவூரில் நடந்த திமுகவின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தில் எழிலரசி என்ற பெண் பேசியபோது, தனது தாய் சிலிண்டர் விபத்தில் மரணமடைந்ததாகவும், அதற்கான தமிழக அரசின் சார்பில் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், தனக்கு  இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.




இந்த தகவல், எழிலரசி சொன்னது முற்றிலும் பொய் என்று தெரியவந்துள்ளது. தமிழக அரசு நிவாரண தொகை செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய எழிலரசி என்ற பெண், ஆரணி அடுத்த புதுக்காமூர் பகுதியில் தனது வீட்டின் அருகில் ஏற்பட்ட  சிலிண்டர் விபத்தில் தனது தாய் சந்திரா இறந்துவிட்டதாகவும், இதற்கான தமிழக அரசின் சார்பில் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டத்தொகை இதுவரை  கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.




முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்தில் இறந்த சந்திராவின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு அந்த தொகை, இறந்த சந்திராவின் மகன் முத்துக்குமரனின் இந்தியன் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தனது வங்கி கணக்கிலிருந்து மின்னனு பரிவர்த்தனை மூலம் இறந்த சந்திராவின் மகன் முத்துக்குமரனின், இந்தியன் வங்கி கணக்கிற்கு அனுப்ப பிறப்பித்த உத்தரவு சான்றாக இருக்கிறது. 

உத்தரவு நகல் இணைக்கப்பட்டுள்ளது








இறந்த சந்திராவின் மகன் முத்துக்குமரனின் வங்கி கணக்கிற்கு நிவாரண தொகையை செலுத்த முழு சம்மதம் தெரிவித்து எழிலரசி கையொப்பமிட்டதும் தெரியவந்துள்ளது. இறந்த சந்திராவின் மகள்கள் எழிலரசி உட்பட மூன்று பெண்களும்,  சந்திராவின் மகன் முத்துகுமரனும் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் எழிலரசி ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளார். வாக்குமூலம் படிவமே இதற்கு சான்றாக இருக்கிறது. 

வாக்குமூலத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது



முதலமைச்சரின் பொது நிவாரண தொகையை பெற்ற பிறகும் அரசு அறிவிக்கப்பட்ட தொகை கிடைக்கவில்லை என்று அபாண்டமாக எழிலரசி பொய் சொன்னாரா? அல்லது  எழிலரசியிடம் பிரச்சாரத்தில் இவ்வாறு தெரிவிக்குமாறு வற்புறுத்தினார்களா? எதுவாக இருந்தாலும், எழிலரசி சொன்னது பொய் என்று இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.


இணைப்புகள்:

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தனது வங்கி கணக்கிலிருந்து நிவாரண தொகையை 11.01.2021 அன்று  மின்னனு பரிவர்த்தனை மேற்கொள்ள கொடுக்கப்பட்ட உத்தரவு.


விபத்தில் இறந்த சந்திராவின் வாரிசுதாரர்கள் எழிலரசி உட்பட மூன்று பேரும்,  2 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை சகோதரர் முத்துக்குமரனின் வங்கி கணக்கில் வரவு வைக்க கையொப்பமிட்ட வாக்குமூலம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies