Type Here to Get Search Results !

ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம்: பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையா? முதல்வருக்கு தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் நன்றி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு ஒப்புதல் வழங்குமாறு, கவர்னரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வலியுறுத்தி உள்ளார். 




இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கொடுக்கும் அழுத்தத்தை கவர்னரால் இனியும் தட்டிக்கழிக்க முடியாது, விடுதலைக்கான வாய்ப்பு பிரகாசமாகி இருப்பதாக தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.


இராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து 3 அல்லது 4 நாட்களில் கவர்னர் முடிவை அறிவிப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கடந்த 21ஆம் தேதியன்று தெரிவித்திருந்தார்.




இந்தநிலையில், ஒரு வாரம் கடந்தும் முடிவு அறிவிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் மிகவும் அக்கறை காட்டி வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இனியும் பொறுப்பதற்கில்லை என நேற்று அதிரடியாக களத்தில் இறங்கினார். நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த அமைச்சரவை கூட்டம் முடிந்தவுடன், நேற்று இரவு அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குச் சென்று, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்தார். இதையடுத்து, 7 பேரின் விடுதலைகுறித்து ஆலோசிக்கப்பட்டது. 7பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, கோரிக்கை மனுவையும் அளித்தார்.


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இதற்கான  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாகக் கூறப்படுகிறது. முதல்வரின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 7 பேர் விடுதலையில் அவர் காட்டும் அக்கறை குறித்து தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.




இது குறித்து அவர்கள் கூறுகையில்; அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக முடிவு மேற்கொண்டதை நாடறியும். இது குறித்த, அரசாணை பிறப்பித்து அரசு பள்ளி மாணவர்களின் வயிற்றில் பால் வார்த்தார். 


தற்போது ஏழு பேர் விடுதலையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதே போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதை கவர்னர் உணர்ந்து கொண்டுள்ளார். முதல்வரின் இந்த அழுத்தத்தையும் ,இந்த விசயத்தில் அவர் காட்டும் அக்கறையையும் கவர்னர் நன்றாகவே உணர்ந்து கொண்டதாக தெரிகிறது. எனவே, இனியும் மெத்தனம் காட்ட முடியாது என்பதால், விடுதலைக்கு ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.


இந்தநிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  காட்டிய இந்த அக்கறையை நாங்கள் மறக்க மாட்டோம். அவருக்கு எங்கள் நன்றிகளை  தெரிவித்துக்கொள்கிறோம். அவர்  சொன்னபடி வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார். எங்களது நன்றியை நாங்களும் வெறும் வாய் வார்த்தையால் மட்டும் சொன்னால் போதுமா..? வரும் தேர்தலில் அதனை நாங்கள் வெளிப்படுத்துவோம். வருகிற சட்டமன்ற தேர்தலில்  அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்து எங்கள் நன்றிக்கடனைச் செலுத்துவோம் என்று மனம் நெகிழ்ந்து பேசினர்.


அதிமுக வட்டாரத்தில் இது குறித்து பேசியபோது; பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை என்பது தமிழக மக்கள் அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது. எனவே விடுதலை உத்தரவு வெளியானால் அது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தமிழ்நாட்டு மக்கள் நன்றி மறவாதவர்கள். தமிழர், தமிழ் என்று வாயடிக்கும் திமுக, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் 10 ஆண்டு காலம் அங்கம் வகித்தும், 7 பேர் விடுதலைக்கு துரும்பைக் கூட கிள்ளிப்போடாமல், இப்போது நாடகமாடி வருகிறது. 




அதிமுக அரசு மட்டுமே இந்த விசயத்தில் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டது. இதை தமிழக மக்கள் உணராமல் இல்லை. எனவே வரும் தேர்தலில் அது எதிரொலிக்கும். அதிமுக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி’’ என்கின்றனர் உற்சாகமாக!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies