பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பெண்ணின் சகோதரின் பெயரை வெளிப்படையாக வெளியிட்டதால் வழக்குப்பதிவு
கடந்த 06 / 01 / 2021 தேதியன்று தனியார் தொலைக்காட்சியில் நடந்த பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை பற்றிய விவாத மேடை நிகழ்ச்சியில், கோவை மாவட்ட தெற்கு திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தென்றல் செல்வராஜ், பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் அவரது சகோதரரின் பெயரை வெளியிட்டுள்ளார்.
பாலியல் குற்ற வழக்கு சம்மந்தமாக பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களது உறவினர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், தென்றல் செல்வராஜ் விவாத மேடையில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரோடு விவரங்களை தெரிவித்ததால் தென்றல் செல்வராஜ் மீதும், அந்த நிகழ்கச்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சரவணன் மற்றும் அந்நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதற்காக, தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி வீடியோவை சமூக வலைதளத்தில் பரவச்செய்த, தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் மீதும் கோட்டூரைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.