மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
மாட்டு பொங்கல் அன்று, மட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கற்பூர தீபாராதனை காட்டுவார்கள். பிறகு பசு மாடு , காளை, எருமை என அனைத்துவித கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். கால்நடைகளுக்கு பொங்கல் கொடுக்கும் போது பொங்கலோ பொங்கல்!! மாட்டு பொங்கல்!! பட்டி பெருக!! பால் பானை பொங்க!! நோவும் பிணியும் தெருவோடு போக!! என்று சொல்வார்கள். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.
கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம்..!!