தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா: சசிகலாவை தவறாக பேசுவதை பொறுக்க முடியாது - முன்னாள் அதிமுக அமைச்சர் கோகுல இந்திரா
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் குறித்தும், சசிகலா (சின்னம்மா ) குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி இன்று உதயநிதி ஸ்டாலின் கண்டித்து சென்னையில் அதிமுகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல்வரும், துணை முதல்வரும் ஆர்ப்பாட்டம் நடத்த சொல்லவில்லை.
மேலும்,எங்கள்ஜெயலலிதா(அம்மாவுடன்) உறுதுணையாக இருந்து, தவ வாழ்க்கையை வாழ்ந்தவர் சசிகலா (சின்னம்மா ) என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.
சசிகலா வெளியே வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது என்று அதிமுகவினர் பேசி வரும் நிலையில், இதுபோல், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். சசிகலா வருகின்ற 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்த்தக்கது.