Type Here to Get Search Results !

தி.மு.க.,வினருக்கு பதிலடி கொடுப்போம் : எச்சரிக்கை விடுத்து அமைச்சர் வேலுமணி டுவிட்

என் மாவட்டத்து மக்கள்கள் மீது குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதேபோல் இனியும் நடந்து கொண்டால் அதற்கான தக்க பதிலடியை கொடுப்போம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்தார்.


கோவையை அடுத்த, தொண்டாமுத்தூரில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் துவங்கியதும், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை மு.க.ஸ்டாலின் கேட்டார்.


அப்போது எழுந்த, திமுக தொப்பி அணிந்த ஒரு பெண், மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்துநின்று பேசத் தொடங்கினார். எந்த தொகுதியை சேர்ந்தவர் நீங்கள் என மு.க.ஸ்டாலின் அவரிடம் கேட்டார். அதற்கு அந்த பெண் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி என்று பதில் கூறினார். அருகில் உள்ள ஊரில் இருந்து வந்ததாக கூறினார்.


அந்த ஊர் எங்கிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கேட்டபோது, எங்கு இருக்கிறது என்றே தெரியாமல், எதற்காக கிராம சபைக் கூட்டம் நடத்துகிறீர்கள்' என கோபமாக கேட்டார் அந்தப் பெண். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம், பரபரப்பு ஏற்பட்டது. திமுக., வினர், ஸ்டாலின் முன்னிலையிலேயே அந்த பெண்ணை தாக்க முயன்றனர். அவர்களை ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். அப்போது, எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உனக்கு பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பி ஆள் என தெரிவித்தார்.


தொடர்ந்து அந்த பெண், திமுக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இந்த கிராம சபை கூட்டம் நடத்துவது எதற்காக என்று கோசம் போட்டுக் கொண்டே வெளியேறினார். வெளியில் நின்றுகொண்டுயிருந்த திமுகவினர், அந்த பெண்ணையும், போலீசாரையும் தாக்கினர். இதில் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளில் திமுகவினர் கடுமையாக திட்டினர்.

இதன் பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:


திமுக கட்டுப்பாடு உள்ள இயக்கம். அந்த பெண்ணை கண்டுபிடித்து எந்த பிரச்னையும் இல்லாமல் அனுப்பி வைத்தும். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களே, இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள். இதுபோல நாங்கள் செய்தால், நீங்கள் மட்டுமல்ல முதல்வரே கூட்டம் நடத்த முடியாது. உங்களுக்கு தைரியம் இல்லை. திமுக தொப்பியை மாட்டி கொண்டு, தைரியம் இருந்தால், அதிமுக என்றுகூறி அமர்ந்திருக்க வேண்டும். இந்த கூட்டத்தை தடுக்க எஸ்.பி.வேலுமணி முயற்சி செய்வது முன்னரே எனக்கு தெரியும். ஒரு கூட்டத்தை தடுக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், எந்த கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம். எச்சரிக்கை என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.


என் மாவட்டத்து மக்கள்கள் மீது குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதேபோல் இனியும் நடந்து கொண்டால் அதற்கான தக்க பதிலடியை கொடுப்போம்  என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies