Type Here to Get Search Results !

"வாட்ஸ்சாப்பில்" இல்லாத விசயம் அப்படி என்ன "சிக்னல்" அப்ளிகேஷனில் இருக்கிறது ?

"வாட்ஸ்சாப்பில்" இல்லாத விசயம் அப்படி என்ன "சிக்னல்" அப்ளிகேஷனில் இருக்கிறது ?



உலகம் முழுவதும்  தப்போதைய வைரல் பேச்சு இது தான். வாட்ஸ்சாப்  மெசேஞ்சருக்கு மாற்றாக சிக்னல் மெசேஞ்சர் அப்ளிகேஷன் என்ற ஒரு அப்ளிகேஷன் வந்துள்ளது என்பதுதான் அந்த பேச்சு. சிக்னல் மெசேஞ்சரில் வாட்ஸ்சாப்பில் கேட்பது போல தனிப்பட்ட விவரங்களும் கேட்கப்பட்டது. எண்டு டூ எண்டு என்க்ரிப்ஷனுக்கும் கேரண்டி என்று பேச்சு நீள்கிறது. இதற்கு மேல்  சூடு பிடிக்கும் அளவிற்கு ‘சிக்னல் அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள்’ என எலான் மஸ்க் கூறியிருக்கிறார். 



சிக்னல் மெசேஞ்சர் அப்ளிகேஷன் என்றால் என்ன ?

2014இல் இது அறிமுகமாகி இருந்தாலும் இப்போது உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் வாட்ஸ்சாப் நிறுவனம் அதன் பயனர்களிடம் தனிப்பட்ட விவரங்களை கேட்பது தான் என சொல்லப்படுகிறது. விண்டோஸ், ஐபோன், ஆண்ட்ராய்ட், என்று அனைத்து விதமான இயங்கு தளங்களில்  சிக்னல் மெசேஞ்சர் அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.



வாட்ஸ் சாப்பை போலவே சிக்னலிலும் வாய்ஸ் கால், வீடியோ கால், டெக்ஸ்ட் மற்றும் ஃபைல்ஸ்களை அனுப்பவும் முடியும். அதே போல செய்திகள் தானாகவே மறைகின்ற வசதியும் இதில் உள்ளது. இந்த சிக்னல் அப்ளிகேஷனில் குரூப்களில் சம்மந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுத்தால் மட்டுமே  அவர்களை குரூப்பில் சேர்க்க முடியும். 



சிக்னல் அப்ளிகேஷனில் குரூப்பில் அதிகபட்சமாக சுமார் 150 நபர்களை சேர்க்க முடியும்.  பிளே ஸ்டோரில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies