எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை அதிமுக ஐடி பிரிவினர் முறியடிக்க வேண்டும்- பொள்ளாச்சியில் முதல்வர் பேச்சு
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் முழு அறிவு திறனை பயன்படுத்தி வரும் தேர்தலில் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று பேசியதாவது...
எதிரிகள் சமூகவலைதளங்களில் மற்றும் பல்வேறு வழிகளில் அனுப்பும் செய்திகளுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பதில் செய்தி அனுப்பி எதிரிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். நமது ஆட்சியில் செய்த நல்ல திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு சரிவர கொண்டுபோய் சேருங்கள்.
எதிரிகளின் பொய் செய்திகளுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். படித்த இளைஞர்கள் என்பதால் நல்ல பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கு உள்ளது. நீங்கள் எதிர்காலத்தில் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளது.
நமது கழகத்தில்தான் அடிப்படை உறுப்பினரும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும். உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவி உங்களைத் தேடிவரும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ் பி வேலுமணி, சட்டப் பேரவைத் துணைத் சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், எம்எல்ஏக்கள் எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் டி.எல்.சிங், வீராசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.