கோவையில் இன்று களைகட்டியது அதிமுக பிரச்சாரம். செண்டை மேளங்கள் முழங்க, வண்ணத்துப்பூச்சிகளால் அலங்கரிக்கப்பட்ட பெண்கள் நடனமாட. கேரளாவில் நடக்கும் விழவைப்போல கதகளி ஆட்டம் ஒரு பக்கம் நடைபெற, மகாவிஷ்ணுவின் அவதார ரூபங்கள் அருள்பாலிக்க கோவை நகர வீதிகள் இன்று களைகட்டியிருந்தன.
ஓணம் பண்டிகையோ என்று என்று எண்ணும் அளவிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் பழனிச்சாமிக்கு இன்று பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தி விட்டனர் கோவை அதிமுக நிர்வாகிகள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டசபைத் தொகுதிகளிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் முதல்வர் பழனிச்சாமி. இன்று காலை 8 மணிக்கே தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, கோவை முழுவதும் பிரம்மாண்டமாக பேனர்கள், கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.