சென்னை அடையாறு ஆற்றால், எதிர்காலத்தில் எந்த வகையிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, சுமார் 4,000 ஏக்கர் வரை, தனியார் நிலங்களை கையகப்படுத்தி, அடையாறு ஆறால், எதிர்காலத்தில் எந்த வகையிலும் வெள்ளப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, 4,000 ஏக்கர் தனியார் நிலங்களை கையகப்படுத்தி, அடையாறு ஆற்றை அகலப்படுத்த, பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், ஆதனூர் அருகிலிருந்து துவங்கும் அடையாறு ஆறு, மண்ணிவாக்கம், வரதராஜபுரம், திருநீர்மலை, அனகாபுத்துார், ஈக்காடுதாங்கல், கோட்டூர்புரம் வழியாக, பட்டினப்பாக்கம் அருகே சென்று கடலில் கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் மட்டுமின்றி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஏரிகளில் இருந்தும், உபரி நீர் மற்றும் மழை நீர், அடையாறு ஆற்றின் வழியாகவே கடலுக்கு செல்கிறது. அடையாறு ஆறு, பல இடங்களில் குறுகலாக இருப்பதால், கனமழை பெய்யும் நேரங்களில், நீர் தங்கு தடையின்றி செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
கடந்த, 2015ஆம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையால், அடையாற்றில் அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, திருநீர்மலை முதல் அனகாபுத்துார் வரை, 3.50 கி.மீ.,க்கு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வரும் காலங்களில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சுமார் 4,000 ஏக்கர் தனியார் நிலங்களை கையகப்படுத்தி, திருநீர்மலை மற்றும் அனகாபுத்துாரில், ஆற்றை அகலப்படுத்த பொதுப்பணித்துறை முடிவெடுத்துள்ளது. இப்பணிகளுக்கு, 40 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்ய வுள்ளது. வட கிழக்கு பருவ மழை முடிந்ததும், இப்பணிகளை துவங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மண்ணிவாக்கம் முதல் திருமுடிவாக்கம் வரை, 15 கி. மீ., தூரத்திற்கு தூர்வாரி, கரை இல்லாத இடங்களில் கரையை பலப்படுத்தப்பட்டது.
முதல் கட்ட பணிக்கு, 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு. அதில், 7 கோடிக்கு தூர்வாரும் பணியும், 7 கோடி ரூபாய்க்கு இதர பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மணிமங்கலம், மண்ணிவாக்கம் ஏரிகளில், வெள்ளப் பாதிப்பை தடுக்கும் வகையில், கதவணையுடன் கூடிய, 'ரெகுலேட்டர்' அமைக்கப்பட்டு உள்ளது.
பாப்பான் கால்வாயில், அகலம் குறைவான இடத்தில், கரைக்கு பதில், 1,200 அடி தூரத்திற்கு "தாங்கு" சுவர் கட்டப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் தேங்கும் மழை நீர், அடையாற்றில் கலக்கும் வகையில், எட்டு இடங்களில்,'ஷட்டர்கள்' அமைக்கப்பட்டுள்ளது.
சோமங்கலம் துணை கால்வாய், 3 கி.மீ., தூரத்திற்கு தூர்வாரி, கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரத்தூர் துணை கால்வாய், 2 கி.மீ., தூரத்திற்கு தூர்வாரி, ஆழப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, திருநீர்மலை முதல் திரு.வி.க., பாலம் வரை, இரண்டு பகுதிகளாக, ஆறு அகலப்படுத்தப்பட்டுள்ளது.
மணப்பாக்கம் உள்ளிட்ட கரை பலவீனமாக உள்ள இடங்களில், 1.6 கி.மீ., தூரத்திற்கு வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
திருநீர்மலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய் இணையும் இடத்தில், 0.4 கி.மீ., தூரத்திற்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது.
திருநீர்மலை, தரப்பாக்கம், கவுல் பஜார் உள்ளிட்ட நான்கு இடங்களில், நகர்ப்புறங்களில் தேங்கும் மழை நீர் அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், 'ஷட்டர்' அமைக்கப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றில், 2015ஆம் ஆண்டுக்கு முன், 2,000 கன அடி தண்ணீர் மட்டுமே சென்றது. ஆற்றை அகலப்படுத்திய பிறகு தற்போது, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. பொதுவாக, 10 செ.மீ., மழை பெய்தாலே, ஆற்றில், 10 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும். கூடுதல் மழை பெய்தால், வெள்ளப் பாதிப்பு நிச்சயம் ஏற்படும். இதனால், ஆற்றை அகலப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இவ்வாறு பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடையாறு ஆறு ஒரு பார்வை
ஆற்றின் நீளம் - 42.1 கி.மீ.,
ஆற்றின் அகலம் - 20 அடி முதல் 600 அடி
நீர் கொள்ளளவு - 10 ஆயிரம் கன அட ி