தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும், அதிமுக பிரமுகர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர், தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் வசந்த்குமார், சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல இளம்பெண்களை ஏமாற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இந்த பாலியல் கொடூர வழக்கு தமிழகத்தையே அப்போது உலுக்கியது.
இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், சிபிஐ விசாரணையை கையில் எடுத்தது. சிபிஐ கடந்த ஆண்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேலும் 3 பேர் பிடிபட்டுள்ளனர். பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம்(34 ), அவரது கூட்டாளிகள் ஹேரன் பால்(29 ), பாபு(27) ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.
மேலும் 3 சிக்கி இருக்கும் நிலையில், பொள்ளாச்சி நகர அரசியல் புள்ளிகளின் பெயர்கள் மற்றும் புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் புள்ளிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் சிக்கிய 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக மாணவரணியை சேர்ந்த அருளானந்தன், பாபு, ஹேரன் பால், ஆகிய 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், வருகிற 21ந்தேதி வரை நீதிமன்ற காவல் கோவை மகளிர் நீதிமன்ற நீபதி நந்தினி தேவி உத்திரவு.
இந்தநிலையில் ஆளுங்கட்சியை பணியவைக்க மிரட்டும் நடவடிக்கையா?
2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தொடர்புடைய மூவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலராக உள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தல் இட ஒதுக்கீட்டில் பாஜக- அதிமுக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், ஆளுங்கட்சியை நெருக்கடியை உருவாக்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.