Type Here to Get Search Results !

சென்னையில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த 18 குடிசை வீடுகள் : பல்லாவரத்தில் பரபரப்பு

சென்னை பல்லாவரம் அருகில் அனகாபுத்தூர் சாந்தி நகரில் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்தது.  தீப்பற்றி எரிந்த 18 குடிசை வீடுகள், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பல்லாவரம் அருகில்  அனகாபுத்தூர், சாந்தி நகரில் 6வது மற்றும் 7வது தெருவில் அடுத்தடுத்து சுமார் 18 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்க தாம்பரம் தீயணைப்பு துறையில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.




எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், தீ விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என சங்கர் நகர் போலீசார் தெரிவித்தனர்.




அடுத்தடுத்து குடிசை வீடுகள் என்பதால் தீ மளமளவென பரவி குடிசைகள் முழுவதும் எரிந்து சேதமாயின. மேலும், வீட்டில் வைத்திருந்த ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவைகள் எரிந்து சேதமடைந்தன. ரேசன் கார்டு அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டுமென குடிசை வீட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து,  தீ விபத்து குறித்து சங்கர் நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies