Type Here to Get Search Results !

பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை: ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவு? #Governor #Perarivalan #Nalini #Murugan

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து இன்று அல்லது நாளை ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.




முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி, தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பியிருந்த நிலையில் ஆளுநர் முடிவு வெளிவராமல் இருந்தது.




உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் 7 பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் வாய்ப்புக் கொடுத்திருந்தது. உச்ச நீதிமன்ற கொடுத்த அவகாசம் நிறைவடைந்த நிலையில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 




மேலும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயலர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies