Type Here to Get Search Results !

வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல்’ என்ற வாசகம் அம்மையார் ஜெயலலிதாவுக்குத்தான் பொருந்தும்

Top Post Ad

லகில் மிகப்பெரிய வல்லரசாக இருக்கும் நாடே ஒரு பெண்ணை ஆட்சிபீடத்தில் ஏற்றி பார்க்காதபோது, ஒரு பெண் ஒரே ஆளாக ஒரு மாநிலத்தில் ஆட்சி செய்தது, இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த திறன் அம்மையார் ஜெயலலிதாவிடம் மட்டுமே இருந்தது. 

அம்மையார் ஜெயலலிதா

சினிமா நடிகையாக, அரசியல்வாதியாக, ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக, முதல்வராக இப்படி பல முகங்கள் கொண்டவராக அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஆளுமைத் திறன் சிறப்பு வாய்ந்தது.  

அம்மையார் ஜெயலலிதாவின் முதல் 20 வருடங்கள் அம்மா வேதவல்லியின் வளர்ப்பு என்றால் அடுத்த 20 வருடங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு. 

அம்மையார் ஜெயலலிதா   புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்

சினிமா,அரசியலில் முதல் 40 வருடங்கள் இப்படி கண்காணிப்பிலேயே இருந்த அம்மையார் ஜெயலலிதா, பிறகு அனைவரிடத்திலும் சகஜமாக பழகி, கட்சி அலுவலகத்திலும், பொதுவெளியிலும் மாற்று கட்சியினருக்கும் பதில் கூறி, ஒரே மூச்சில் 20க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசி அசத்தியவர் அம்மையார் ஜெயலலிதா. 

1990களில் நம்பிக்கைக்குரியராகவும் தோழியாகவும் இருந்த வி.கே.சசிகலாவும் அவர்களின் குடும்பத்தாருடன் மட்டுமே மிக நெருக்கமான பழக்க வழக்கம் என்றாலும் பெருமப்பாலும் தனிமையை கடைபிடித்தவர். அந்த நேரத்தில் அதிகமாக புத்தகங்கள் வாசிப்பதை பழக்கமாக வைத்திருந்தவர் அம்மையார் ஜெயலலிதா.  


அம்மையார் ஜெயலலிதா, வி.கே.சசிகலா 

ஒரு தலைவர் எந்த அளவிற்கு தனது தனிப்பட்ட பக்கத்தை தனிமைப்படுத்திக் கொள்கிறார்களோ... அவர்களால் பொதுவெளியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்' என்பதே மேலாண்மை விதி.   

இது, அம்மையார் ஜெயலலிதாவின் 25 வருட அனுபவங்கள். அம்மையார் ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுக்கள், கட்சி பொதுக்கூட்டங்களோ அவர் பேசினால் குறுக்குப் பேச்சுக்கே இடமிருக்காது. சரியோ தவறோ அம்மையார் ஜெயலலிதாவின் சில தீர்க்கமான முடிவுகள். யார் என்ன சொன்னாலும் இறுதியான வடிவம் 

சட்டமன்றத்தில் அம்மையார் ஜெயலலிதா


ஜெயலலிதா என்ற தனி நபரால் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு நிகர் அம்மையார் ஜெயலலிதாதான்.  

ஒரு தலைவன் எப்போதுமே ஒருதலைபட்சமான முடிவுகளை எடுக்கக் கூடாது. குறிப்பிட்ட நபருக்கு மட்டும் சாதகமாக இருக்கக் கூடாது. இதனை தனது அமைச்சரவை மாற்றங்களிலும், கட்சிப் பதவிகளிலும் அசாதாரணமாக செய்து காட்டியுள்ளார் அம்மையார் ஜெயலலிதா. 

தவறு என்று வந்துவிட்டால், நம்பிக்கையான அமைச்சர் எனப் பெயர்பெற்றவருக்குக்கூட அடிப்படை உறுப்பினர் பதவிகூடக் கொடுக்காமல் ஒதுக்கிவைப்பதிலும் சரி, திறமையான ஒருவர் கீழ் நிலையில் இருந்தால்... அவரை உரிய இடத்துக்குத் தூக்கிவிடுவதிலும் அம்மையார் ஜெயலலிதாவின் செயல்களில் இயல்பாகவே உள்ள குணம். பிடிக்காது என்றால் பிடிக்காதுதான். இந்த அசாதாரண மனோபாவம்தான் அம்மையார் ஜெயலலிதாவின் அடையாளம்.

சட்டமன்றத்தில் அம்மையார் ஜெயலலிதா

ஒரு விசியத்தை தவறாகச் செய்தால் ஒப்புக்கொள்ளுங்கள், அதனை அடுத்த முறை நடக்காமலும், சென்ற முறையைவிடச் சிறப்பாகவும் செய்துகாட்டுங்கள்’’ என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் வரிகள்.

அம்மையார் ஜெயலலிதாவைப் பார்த்து நீங்கள் தவறான முடிவெடுத்துவிட்டீர்களா என்று கேட்போரின் பேட்டியாக இருக்கட்டும், வழக்குகள் நிரூபிக்கப்பட்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்த கர்ஜனையாகட்டும், துணிச்சல் இல்லாவிட்டால் அம்மையார் ஜெயலலிதா என்றைக்கோ அரசியலைவிட்டு வெளியேற்றப்பட்டிருப்பார். சட்டப்பேரைவையில்  அம்மையார் ஜெயலலிதாவின் கர்ஜனைக்கும் வார்த்தைகள் அவ்வளவு பெரிய அரங்கில் அனைவரையும் ஒரே பக்கமாக இழுக்க வைக்கும்  ஆளுமை நிறைந்தவை. அய்யா கருணாநிதி அவர்களை எழுத்தினாலும் பேச்சாலும் வெல்வது கடினம் என்றால், அதற்கு சற்றும் சளைக்காதவர் அம்மையார் ஜெயலலிதா.

சட்டமன்றத்தில் அம்மையார் ஜெயலலிதா, அருகில் திமுக தலைவர் கருணாநிதி  

இந்தத் துணிச்சல்தான் 110 விதியின் கீழ்  அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளையும் யார் விமர்சித்தும் கேட்காமல் அரங்கேற்றியது. இன்னும் சொல்லப்போனால், அம்மையார் ஜெயலலிதாவின் நிழல்கூடப் பிடிவாதமாகத்தான் இருக்கும். அதுதான் அம்மையார் ஜெயலலிதா. 

அனைத்துத் தலைவர்களின் உரையும், நாம், நமது என்ற போக்கிலேயே இருக்கும். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் அம்மையார் ஜெயலலிதா. எனது ஆட்சியில் நடந்த சாதனைகள், ‘மக்களுக்காக நான்... மக்களால் நான்’ எனும் தனிமனித விஷயத்தை முன்னிறுத்துவதில் அம்மையார் ஜெயலலிதா கில்லாடி. வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல்’ என்ற வாசகம் அம்மையார் ஜெயலலிதாவுக்குத்தான் பொருந்தும். 

ஆக்ரோஷமாக அம்மையார் ஜெயலலிதா

இவர், வீழ்ந்தபோதெல்லாம் எவ்வளவு சீக்கிரம் திரும்ப வரவேண்டும் என்று ஆக்ரோஷமாக யோசிக்கும் மனோபாவத்தை இவரிடம் பார்க்க முடியும். அம்மையார் ஜெயலலிதாக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர்களும் சரி, அம்மையார் ஜெயலலிதாவுக்கு பின் அரசியலுக்கு வந்தவர்களும் சரி, கட்சியில் அம்மையார் ஜெயலலிதாதான் எல்லாம் என்று நினைக்கவைத்தது அவரது ஆளுமைதான். அதுதான் அனைவரையும் இவரைப் பார்த்து இரும்பு மனுசி, சிங்கப்பெண் எனச் சொல்ல வைத்துள்ளது.

அம்மையார் ஜெயலலிதா வருகை, அமைச்சர்கள் வணங்குதல் 


தமிழ்நாட்டில் அரசியலில்  ஆர்வம் இல்லாத பெண்களிடம் சென்று, ‘உங்கள் ரோல்மாடல் யார்’ என்றால், அம்மையார் ஜெயலலிதா என்ற பதில் சற்றும் தாமதமில்லாமல் வரும். 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு நிகரான பிரச்னையைச் சந்தித்தவர் அம்மையார் ஜெயலலிதா.  வழக்காகள்  தனிப்பட்ட  சறுக்கல்களில் மீண்டுவர மிகவும் கடுமையாகப் போராடி வெற்றிபெற்றவர் அம்மையார் ஜெயலலிதா.

சட்டமன்றத்தில் அம்மையார் ஜெயலலிதா


அவர் கடைசியாக அவரது உடல்நிலையோடும்கூட அவர் போராடிக்கொண்டுதான் இருந்திருக்கிறார். ‘‘உங்களை யாரோடும் ஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள். அது, உங்களையே அவமானப்படுத்திக் கொள்வதற்குச் சமம்’’ என்பது ஹிட்லரின் வரிகள். ஜெயலலிதா தன்னை யாரோடும் ஒப்பிடாத தலைவர் என்பது அனைவரும் அறிந்ததே. 

இன்று  அவர் மறைந்துவிட்டார் என்றாலும், நான் ஜெயலலிதாபோல இருக்க வேண்டும் என்ற எண்ணம், பலரது சமூக வலைதளத்தில் பதிவுகளில் தெரிகிறது.  ஒரு மாநிலத்தின் முதல்வர் இறந்துவிட்டார் என்பதை, ஒரு நாடு இத்தனை சீரியஸாகப் பார்க்கிற‌து என்றால்.
அது, ஜெயலலிதாவாக மட்டுமே இருக்க முடியும். 

தமிழகம் தத்தளித்த நாள்
அதிமுகவுக்கு வெற்றிடம் தந்த நாள் 

ஒரு மிகப்பெரிய நிறுவனம், ஒரே தலைவரின்  கீழ் நீண்டகாலம் நன்றாக இயங்குகிறது. யாரும் எதிர்பார்க்காமல் திடீரென அவரை இழக்கிற‌து என்பது,  அங்கு மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும். அந்த நிலைதான் அதிமுகவுக்கும். ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின்  வெற்றிடத்தை நிரப்ப இன்னும் பல வருடங்கள் ஆகும். 

எந்தவொரு பெண்ணாவது மிகுந்த துணிச்சலோடு நான்,எனது என்ற தொணியில் பேசினால் சட்டென்று  நினைவுக்கு வருவது ஜெயலலிதாவாகத்தான் இருக்கும்.

மா.வெற்றிவேல் 

Below Post Ad

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.