டிசம்பர் 2
தேசிய மாசு கட்டுப்பாட்டு நாள்
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அதன் பேரழிவு விளைவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய மாசு கட்டுப்பாட்டு நாள் டிசம்பர் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து கொடிய வாயு மீத்தைல் ஐசோசயனேட் கசிந்தபோது போபால் எரிவாயு சோகத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூரும் வகையில் தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது .
அந்த பேரழிவின் விளைவுகள் 35 ஆண்டுகளுக்கு மேலாகியும் இப்போது உணரப்படுகின்றன.
மாசு கட்டுப்பாட்டுச் செயல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்துவதும், தொழில்துறை பேரழிவுகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் முக்கிய நோக்கங்கள்.
காற்று, மண், சத்தம் மற்றும் நீர் மாசுபடுவதைத் தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாள் நோக்கம்.
உலகளவில் பத்து பேரில் ஒன்பது பேருக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான காற்றை அணுக முடியாது என்பதையும் தரவு வெளிப்படுத்துகிறது.
மாசு கட்டுப்பாட்டு தின முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மாசுபாட்டை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதும் ஆகும்.
சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை ஏற்படுத்தும் தன்மைக்கொண்ட எந்த ஒரு பொருளும் சுற்றுச்சூழல் மாசு என்று அழைக்கப்படும்.
வேதிப் பொருட்கள், புவி வேதிப் பொருட்கள் (தூசு, வண்டல், மணல் உள்ளிட்டவை) உயிரினங்கள் மற்றும் அவற்றின் கழிவுகள் சுற்றுச்சூழலில் மோசமாக, விரும்பத்தகாத தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்படும் சக்திகள் (வெப்பம்) ஆகியவை சுற்றுச்சூழல் மாசுக்களில் அடங்கும்.
சுற்றுச்சூழல் மாசு என்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அடர்த்தியாக கலந்திருக்கும் திட, திரவ மற்றும் வாயு பொருட்கள் ஆகும். உலோகங்கள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுளில் உள்ள இயற்கை மற்றும் செயற்கை பொருட்கள், அணுமின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கதிர் வீச்சுத் தன்மைகொண்ட கழிவுப் பொருட்கள், அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பம், கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள், கந்தக ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகியவையும் கழிவுப் பொருட்களாக இருக்கலாம். நாம் பயன்படுத்திவிட்டு வீசி எறியும் பொருட்களில் உள்ள மிச்சங்கள் கூட மாசுக்கள்தான்.
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் மிச்சம் ஆகியவைதான் மாசுக்கள் உருவாகும் ஆதாரமாக திகழ்கின்றன. வேதிப்பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் அவற்றின் அருகில் உள்ள ஏரிகள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் மாசுபடுகின்றன.
அதேபோல் சாலையில் செல்லும் ஊர்திகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை, தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் புகைகள் ஆகியவற்றால் வளிமண்டலத்திலுள்ள காற்று மாசுபடுத்தப்படுகிறது.
பல்வேறு வகையான மனித நடவடிக்கைகளின் மூலம் வெளியாகும் மாசுக்களை உள்ளடக்கிய கழிவுப் பொருட்கள், வளிமண்டளத்தில் சேரும் வாயுவாகவோ அல்லது நீர் நிலைகள் மற்றும் தரைகளில் சேரும் பொருட்களாகவோ, நமது சுற்றுச்சூழலுக்குள் சேருகின்றன. இந்த மாசுக்கள் சுற்றுச்சூழலில் இயற்கை தன்மையை மாற்றி அதன் மூலம் மனித குலத்திற்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும், பிற பொருட்களுக்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மாசுபாட்டை தடுத்தல்
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பது இருவகைப்படும். ஒன்று சுற்றுச்சூழல் மாசுக்களை அவை எங்கிருந்து உருவாகின்றன என்பதை கண்டறிந்து அங்கேயே தடுப்பதாகும். மற்றொன்று சுற்றுச்சூழல் மாசுக்கள் உருவாவதை அழித்தல் அல்லது குறைக்கும் வழிகள் ஆகும்.
தகவல்
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்.