ஆனைமலை மாசாணியம்மன் குண்டம் விழா கொடியேற்றம்
பொள்ளாச்சி
கோவை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றான ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் துவங்கும். அதன்படி, இந்த ஆண்டு தை அமாவாசையை முன்னிட்டு இன்று ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ராஜகோபுரம் முன்பு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சர்க்கார் பதிப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் கொடிமரத்திற்கு ஆனைமலை உப்பாற்றங்கரையில் வைத்து பூஜை செய்யப்பட்ட பின்னர், கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அயிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வுக்கான மயான பூஜை வரும் 3ஆம் தேதி நள்ளிரவும், பக்தர்கள் தீமிதிக்கும் குண்டம் திருவிழா, பிப்ரவிரி 6ஆம் நடக்க உள்ளது.
நிகழ்ச்சியில் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆனைமலை ஒன்றிய குழு தலைவர் சாந்தி கார்த்திக், திமுக ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி ரவிச்சந்திரன், ஒடைய குளம் பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி மோகன், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் அகத்தூர்சாமி, திமுக நிர்வாகிகள், வேட்டைக்காரன் புதூர் நிஷாந்த், அடிவெள்ளி முரளி, கோயில் நிர்வாகத்தினர், தலைமை முறைதாரர், விழா குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.