எரிப்பட்டி ஊராட்சி: கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகம்...
பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி ஊராட்சி வீடு, கடைகள் என பல்வேறு இடங்களில் சட்டத்துக்கு புறம்பாக, சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை என்பதால், டாஸ்மார்க் கடையில் விற்பனை செய்வதுபோல தங்கு தடையின்றி மது பாட்டில்களை மது பிரியர்கள் வாங்கி செல்வதால், விற்பனை படிஜோராக நடந்து வருகிறது.
ஏரிப்பட்டியில் உள்ள ஜல்லிமேடு, அண்ணா சாலை போன்ற வீதிகளில் உள்ள வீடுகளிலும், அன்புநகர் பகுதியில் உள்ள கடையிலும் மது விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அரசு மது விற்பனை விலைவிட கூடுதல் விற்பனைக்கு விற்கப்படுகிறது. ஒரு பாட்டிலுக்கு ஆரம்ப விலையாக ரூபாய் 220, 250 முதல் என விலை நிர்ணயம் செய்து அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால், சிறுவயது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கு அடிமையாக உள்ளார்கள். இதுபற்றி அந்த பகுதி பெண்கள் கூறும்போது; வீட்டின் அருகில் விற்பதால் பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருப்பதுபோல் இருக்கவேண்டி உள்ளது. இளைஞர்களும் குடிக்கு அடிமையாகி வருகிறார்கள் என்று புலம்புகின்றனர். காவல்துறை உடனடியாக தலையிட்டு மது விற்பனையை தடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர்.