"பசுமை குரலோன் மகேந்திரனின்" பசுமை குரலும், பொதுநல தொண்டும்
பொள்ளாச்சி ஆகஸ்ட் 06.,
இயற்கைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்துத் தமிழகத்தில் ஒலித்த குரல்களில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இருந்தாலும் "பசுமை குரல்" என்ற பொதுநல தொண்டாற்றும் அமைப்பின் மூலம் பல்வேறு சேவைகளை செய்துவரும் மகேந்திரனின் குரலும் முக்கியமானது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையம் மகேந்திரன், ரஜினிகாந்த் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகு, பல தொண்டர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்துகொண்டனர். ஆனால், மகேந்திரன் தன் தலைவர் அரசியலை விரும்பாத நிலையை, தானும் அப்படியே வாழ நினைத்து, "பசுமை குரல்" என்ற பெயரோடு பொதுநல தொண்டாற்ற முடிவு செய்து தற்போது சிறப்பாக செய்தும் வருகிறார்.
எத்தனையோ பசுமை சார்ந்த நிகழ்வுகள், எத்தனையோ கருத்தரங்குகள், எத்தனையோ மக்கள்நல பணிகள், எத்தனையோ பள்ளி மாணவர்களோடு கலந்துகொண்ட நிகழ்வுகள் என நேரமற்று ஓடி உழைக்கும் மாமனிதர் மகேந்திரன்.
மக்கள் நலனையும் பசுமைச் சிந்தனையையும் இணைத்துக் கொண்டு பயணிப்பவர். காந்தியையும் நம்மாழ்வாரையும் பசுமைப் பார்வையில் பயின்றவர். பலருக்கும் வழிகாட்டியாக, இப்படி இன்னும் எத்தனையோ கூறலாம். இயற்கைதான் நமது ஆதாரம், அது அழிந்தால் எல்லாம் அழியும் என்கிற கருத்தை அனைவரது மனத்திலும் ஆழப்பதிக்க முனைந்தவர். அதற்காகப் பசுமை குரல் மூலம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். பள்ளி மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை கொடுத்து நட்டு பராமரிக்க கற்றும் தருகிறார் மகேந்திரன்.