அ.தி.மு.கவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள்.. வி.கே.சசிகலா
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க., ஒன்றினையும் என வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 01.,
அ.தி.மு.க தனது தலைமையில் ஒன்றிணையும் வி.கே.சசிகலா அ.தி.மு.கவில் நிலவும் பிரச்சனை காலப்போக்கில் மாறிவிடும் என வி.கே.சசிகலா உறுதி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை இன்று சென்னையில் வி.கே.சசிகலா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகிய யார் பக்கமும் நான் இல்லை தொண்டர்கள் பக்கம் மட்டுமே உள்ளேன்.
அ.தி.மு.கவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றார்.
சாதிரீதியாக அ.தி.மு.க பிளவு பெற்றுள்ளது என்பது குறித்த விமர்சனத்திற்கு பதில் அளித்த சசிகலா, எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கமாக அ.தி.மு.க விளங்கி வருகிறது. அதே மனநிலையை நானும் கொண்டிருக்கிறேன். சாதி மதங்களை ஒன்றாக இணைக்க கூடிய இயக்கம் அ.தி.மு.க. அதன் அடிப்படையிலேயே என்னுடைய நகர்வுகள் இருக்கும். அ.தி.மு.க என்பது நிறுவனம் அல்ல அனைவருக்குமான இயக்கம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க ஒன்றினையும். அ.தி.மு.கவில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும்; தற்போதைய சூழல்கள் காலப்போக்கில் சரியாகி விடும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, வி.கே.சசிகலா உடனான சந்திப்பிற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அ.தி.மு.கவில் தற்போது நிலவி வரும் பிரச்சனை உடனடியாக முடிவுக்கு வராது. இன்னும் சில காலம் நீடிக்கும். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். அ.தி.மு.கவில் நிலவும் தற்போதைய பிரச்சனைக்கு பின்னணியில் பா.ஜ.க இல்லை.
அ.தி.மு.கவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இல்லை, ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளார்கள் என்பது பிம்பம். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அடிப்படை உரிமைகள் தற்போதைய நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. தொண்டர்கள் மட்டுமே தலைமை யார் என்பது முடிவெடுக்க முடிவும். இடைக்கால பொதுச்செயலாளர் என்பது தற்காலிகமே என்று அவர் தெரிவித்துள்ளார்.

.jpg)