வால்பாறை செல்லும் சாலையில் திடீர் பள்ளம்: வாகனங்கள் நிறுத்தி வைப்பு... பயணிகள் பரிதவிப்பு..!
தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி நேற்று இரவு வால்பாறை சுற்று பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் செக்போஸ்ட் அருகே சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதுள்ளது. இதனால், வால்பாறை செல்லும் வாகனங்கள் ஆழியார் செக்போஸ்ட் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வால்பாறை செல்லும் பயணிகளுக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




