சேலத்தில் 19 ஆம் தேதி ஆலோசனை கூட்டம்: ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவிப்பு
சேலம் நவ 14.,
தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழக இளைஞர் இயக்க மாவட்ட அமைப்பாளர்கள் சார்பில் 19 ஆம் தேதி சேலத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் க.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழக இளைஞர் இயக்க மாவட்ட அமைப்பாளர்கள் சார்பில் 19 ஆம் தேதி சேலத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதால் இரு அமைப்பாடுகளின் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பழங்குடியினர் வனங்களில் குடியிருப்போர் வன உரிமை சட்டத்தின்படி, பழங்குடியின மக்கள் விவசாயம் செய்யும் விவசாய நிலங்களுக்கு, வன உரிமை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள். வனப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பு குறித்த ஆலோசனை.
மேலும், வனப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு தனிநபர் உரிமை பட்டா வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை. வன நிலங்களில் சிறு வகை சிறுதானியங்கள் மகசூல் சேமிப்பதற்கு சமூக வன உரிமை பட்டா வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரில் சென்று கோரிக்கை வைப்பது குறித்த ஆலோசிக்கப்படவேண்டும்.
ஆலோசனைக் கூட்டத்தில் வனஉரிமை பட்டா, வாழ்வாதார திட்டங்கள், பழங்குடி மக்களுக்கான தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகள், ஜெம்பீம் திரைப்படம் பற்றிய நமது கருத்து, இயக்கம் பலப்படுத்தல் பற்றிய ஆலோசனை, பயிற்சி பட்டறைகள்
என்று நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழக இளைஞர் இயக்க மாவட்ட அமைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.




