Type Here to Get Search Results !

ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவர் 'அரிமா' அசோக் சண்முகசுந்தரம் பிறந்தநாள் விழா


ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவர் 'அரிமா' அசோக் சண்முகசுந்தரம் பிறந்தநாள் விழா

பொள்ளாச்சி அக். 21.,
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் அரிமா அசோக் சண்முக சுந்தரம் அவர்களின் 71வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

ஆனைமலை முன்னாள் பேரூராட்சித் தலைவர்'அரிமா'அசோக் சண்முகசுந்தரம் அரிமா சங்கத்தில் மாவட்ட ஆளுனராக பணியாற்றியவர். மேலும் ஆனைமலை திமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர். 

அசோக் சண்முகசுந்தரம்  07.11.2017 ஆண்டு மறைந்தார். அவர் நினைவாக இன்றளவும் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அரிமா சங்கத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் அரிமா"அசோக் சண்முகசுந்தரம்"அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு,  11வது வட்டாரம் சார்பில் வட்டாரத் தலைவர் 'அரிமா' கோபிநாத் விழா ஏற்பாடு செய்திருந்தார். 

இவ்விழா ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது. விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  

நடைபெற்ற நிகழ்ச்சியை ஆனைமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் A.R.V.சாந்தலிங்ககுமார்,  ஸ்ரீராமு கல்வி நிறுவனங்களின் தலைவர் GLT ஒருங்கிணைப்பாளர் PMJF Dr.R..நித்யானந்தம் தலைமை வகித்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி விழாவை சிறப்பித்தனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies